பேரிடர் மேலாண்மை

அவசரநிலை நிர்வகித்தல் (அல்லது பேரழிவு நிர்வகித்தல்) என்பது அபாயநிலைகளைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கை ஆகும்.[1]பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு அதை எதிர்கொள்வதற்கு எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையே இப்பணியாகும். பேரழிவுக்கு எதிரான நடவடிக்கை (எ.கா., அழிவு ஏற்பட இருக்கும் பகுதியை அவசரமாகக் காலி செய்தல், தொற்றுநோய் பரவாமல் தடுத்தல், தூய்மை செய்தல் மற்றும் பல), இயற்கையாலோ அல்லது மனிதர்களாலோ உருவாக்கப்பட்ட பேரழிவுகளுக்குப் பின்னர் சமுதாயத்தை மறுசீரமைத்தல் போன்றவையும் இப்பணியில் மேற்கொள்ளப்படுகிறது. அவசரநிலை நிர்வகித்தல் என்பது இடர்பாடுகளின் விளைவாய் ஏற்படும் பேரழிவுகளின் பாதிப்புகளை சீர்படுத்தவோ அல்லது தவிர்க்கவோ தனிப்பட்ட நபர்களாலோ, குழுவாகவோ அல்லது சமுதாயத்தினர்களாலோ தொடரப்படும் செயல்பாடாகும். அழிவு ஏற்பட்ட பகுதியைப் பொறுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.[2] அரசாங்கம் சார்ந்த மற்றும் அரசாங்கம் சாரா ஈடுபாடுகளின் அனைத்து நிலைகளிலும் அவசரகால திட்டங்களின் ஒருமைப்பாட்டை பயனுள்ள அவசரநிலை நிர்வகித்தல் முற்றிலுமாக சார்ந்திருக்கிறது. ஒவ்வொரு நிலையில் உள்ள நடவடிக்கைகளும் (தனிநபர், குழு, சமூகம்) மற்ற நிலைகளைப் பாதிக்கிறது. இது குடியியல் பாதுகாப்புக்கான நிறுவனங்களுடன் அல்லது அவசரநிலை சேவைகளின் உடன்பாடான கட்டமைப்பினுள் அரசாங்கம் சார்ந்த அவசரநிலை நிர்வகித்தலுக்கான பொறுப்பில் அங்கம் வகிப்பதற்குப் பொதுவானதாக இருக்கிறது. தனியார் துறைகளில் அவசரநிலை நிர்வகித்தல் என்பது சிலநேரங்களில் வணிகத் தொடர்ச்சித் திட்டமிடல் எனக் குறிப்பிடப்படுகிறது.

Comments

Popular posts from this blog

குழந்தைகள் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு