நீங்கள் குழந்தைகளுடன் நட்புணர்வுடன் பழகும் ஆசிரியரா? கீழ்க்கண்டவாறு நடந்து கொண்டால், அவ்வாறான ஆசிரியராக உங்களால் ஆக முடியும். குழந்தைகளுக்கான உரிமைகளும் மனித உரிமைதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது போன்றப் புரிதலை, நீங்கள் இருக்கும் சமுதாயத்தில் உருவாக்குங்கள். உங்களுடைய வகுப்புகள் நடக்கும்போது அதில் இருப்பது மிகுந்த பயனளிக்கக் கூடியது என்பதைக் குழந்தைகள் உணருமாறு செய்யுங்கள். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் திறந்த மனதுடன் இருங்கள் குழந்தைக்கு, நண்பனாகவும் ஆசானாகவும் வழிகாட்டியாகவும் இருங்கள். சுவையாகப் பாடம் எடுங்கள். மாணவர்களுக்குப் பயனுள்ள பல தகவல்களைச் சொல்லுங்கள் நீங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல், குழந்தைகள் கேள்விகள், சந்தேகங்கள் கேட்பதற்கு வாய்ப்புகளை உருவாக்குங்கள். துன்புறுத்தப்படுவது, உதாசீனப்படுத்தபடுவது, கற்றுக்கொள்வதில் சிரமங்கள் இருப்பது போன்ற பல குறைபாடுகளை அறிந்து உணரப் பழகுங்கள். குழந்தைகள் தங்களது அபிப்ப...
Comments
Post a Comment