குழந்தைகள் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு

நீங்கள் குழந்தைகளுடன் நட்புணர்வுடன் பழகும் ஆசிரியரா?                                 Image result for teacher and student images   



கீழ்க்கண்டவாறு நடந்து கொண்டால், அவ்வாறான ஆசிரியராக உங்களால் ஆக முடியும்.
  • குழந்தைகளுக்கான உரிமைகளும் மனித உரிமைதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது போன்றப் புரிதலை, நீங்கள் இருக்கும் சமுதாயத்தில் உருவாக்குங்கள்.
  • உங்களுடைய வகுப்புகள் நடக்கும்போது அதில் இருப்பது மிகுந்த பயனளிக்கக் கூடியது என்பதைக் குழந்தைகள் உணருமாறு செய்யுங்கள்.
  • புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் திறந்த மனதுடன் இருங்கள்
  • குழந்தைக்கு, நண்பனாகவும் ஆசானாகவும் வழிகாட்டியாகவும் இருங்கள்.
  • சுவையாகப் பாடம் எடுங்கள். மாணவர்களுக்குப் பயனுள்ள பல தகவல்களைச் சொல்லுங்கள்
  • நீங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல், குழந்தைகள் கேள்விகள், சந்தேகங்கள் கேட்பதற்கு வாய்ப்புகளை உருவாக்குங்கள்.
  • துன்புறுத்தப்படுவது, உதாசீனப்படுத்தபடுவது, கற்றுக்கொள்வதில் சிரமங்கள் இருப்பது போன்ற பல குறைபாடுகளை அறிந்து உணரப் பழகுங்கள்.
  • குழந்தைகள் தங்களது அபிப்பிராயங்கள், கவலைகள், பயன்கள் சோகங்கள் போன்ற பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அவர்களோடு பழகுங்கள். அவர்களோடு சாதாரண விஷயங்களைப் பற்றியும் கலந்து பேசுங்கள்.
  • நன்றாக கவனிக்கக் கற்றுக்கொள்ளுங்கள், குழந்தைகள் பள்ளியிலும் தங்களது வீடுகளிலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பிரச்சினைகளைப் பற்றி அவர்களுடன் விவாதியுங்கள்.
  • மாணவ மாணவியரின் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய விஷயங்களைப் புரிந்துகொள்ளச் செய்யுங்கள்.
  • இம்மாதிரியான சந்தர்ப்பங்களில், பயன் ஏற்படுத்தும் வகையில் அவர்கள் கலந்துகொள்ள அவர்களது திறமைகளை வளர்த்துக்கொள்ளச் செய்யுங்கள்.
  • பள்ளியின் நிர்வாகத்தினருடன், மாணவர்களைக் கலந்துரையாடச் செய்யுங்கள் அதற்கான கூட்டங்களை ஏற்பாடு செய்யுங்கள்.
  • பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டங்களில் குழந்தைகளுக்கு என்று இருக்கும் உரிமைகளைப் பற்றி விவாதம் ஏற்பாடு செய்யுங்கள்.
  • உடல் ரீதியான தண்டனைகளைத் தரக் கூடாது என்று தீர்மானியுங்கள். எதுவாக இருந்தாலும், பேசிப் புரியவைப்பது, ஆற்றுப்படுத்தல் போன்ற முறைகளைக் கையாண்டு குழந்தைகளுக்குக் கட்டுப்பாடு ஏற்படுவதன் அவசியத்தைப் புரியவையுங்கள்.
  • பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவியுங்கள். சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள், பாரபட்சம் காட்டப்படும் குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆகிய குழந்தைகளோடு நல்ல உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
  • வேலை செய்யும் சிறுவர்களைப் பற்றி எதிர்மறையாகச் கூறப்படுவதைத் தடுத்து நிறுத்துங்கள். அதே போல, தெருவோரச் சிறுவர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகள், கடத்தல்கள், இல்லங்களில் நிகழ்த்தப்படும் வன்முறைகள், குழந்தைகள் கொடுமைப்படுத்தப்படல், சட்டத்துக்கு எதிரான செயல்களைச் செய்யும் குழந்தைகள் போன்ற பாதுகாப்புத் தேவைப்படும் பல குழந்தைகள் எதிர்மறையான உதாரணங்களாக மாற்றப்படுவதைத் தடுத்து நிறுத்துங்கள்.
  • உங்களது வீடு மற்றும் வேலை செய்யும் இடங்களில் குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
  • ஜனநாயக முறையில் செயல்படும் அதே நேரத்தில் கட்டமைப்பு இல்லாத வகையில் செயல்படாதிருங்கள்.
  • குழந்தைகளைப் பள்ளியில் மட்டுமின்றி, அவர்களது சமூகங்களிலும் துன்புறுத்தாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
  • அப்படி நிகழக்கூடிய சூழ்நிலை எழுந்தால், காவல்துறையை அழைக்கவோ/சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவோ தயங்காதீர்கள்.
  • குழந்தைகள் தங்களது கருத்துகளை, அவர்கள் சார்ந்த சமூகங்களின் பெரியவர்களிடம் எடுத்துக்கூறுமாறு ஊக்கப்படுத்துங்கள்.
  • நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யயும் பொறுப்பைக் குழந்தைகளுக்குத் தாருங்கள் அவர்களுக்குப் பொறுப்புகளைத் தந்து அவற்றை நிறைவேற்ற வழிகாட்டுங்கள்.
  • குழந்தைகளைப் பக்கத்தில் இருக்கும் முக்கிய இடங்கள், மற்றும் சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றிற்குக் கூட்டிச் செல்லுங்கள்.
  • குழந்தைகளைக் கலந்துரையாடல்கள்/விவாதங்கள்/கேள்விபதில் நிகழ்ச்சிகள் மற்றுமுள்ள அர்த்தமுள்ளப் பொழுதுபோக்கு அம்சங்களில் கலந்துகொள்ளுமாறு ஊக்கப்படுத்துங்கள்.
  • புது விதமான முறைகளில், பெண் குழந்தைகள் கல்வி கற்பது, வகுப்பறைகளில் மனம் ஒன்றிக் கலந்துகொள்வது போன்றவற்றை உறுதிசெய்யுங்கள்.
  • பாதியில் பள்ளிப்படிப்பை நிறுத்தும் பெண்கள், வகுப்புக்கு அடிக்கடி விடுப்பு எடுக்கும் பெண்களைப் பற்றி அறிந்து அவ்வாறு அவர்கள் தொடர்ந்து விடுப்பு எடுக்காமல் இருக்க வழி செய்யுங்கள்.
  • குழந்தைகளைச் சுற்றி ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க அனைத்து ஆசிரியர்களும் முனைந்து உதவி செய்தால் நிச்சயம் முடியும்.
  • உங்களது கவனிக்கும் திறன்தான் மிகவும் முக்கியமானது. கூர்ந்து கவனித்தால்தான் உங்கள் வகுப்பில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் சரியான முறையில் மதிப்பீடு செய்ய முடியும். எதாவது பிரச்சினை இருப்பதை உங்களால் கண்டறிய முடிந்தால், அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்து அறிவதுதான் உங்களது அடுத்த கட்டப் பணியாக இருக்க வேண்டும்

Comments

Popular posts from this blog

பேரிடர் மேலாண்மை