ஊக்கம்

ஆசிரியர் அழைத்திருந்தார் 
குறுஞ்செய்தி அனுப்பி 
என் மகனுடன் போனேன் 
மார்க்கு பட்டியலை என்னிடம் 
காட்டி உன் மகன் 
சரிவர படிப்பதில்லை 
வகுப்பறைக்கு வந்தவுடன் 
உறங்கிவிடுகிறான் 
அப்படியே விழித்திருந்தாலும் 
அங்கும் இங்கும் 
சுற்றித்திரிகிறான் 
வீட்டில் கற்றுக்கொடுங்கள் என்றார்... 

திரும்பி பார்த்தேன் அந்த 
பிஞ்சுகைகள் வகுப்பறையில் உள்ள விளையாட்டு 
பொம்மைகளோடு விளையாடிக்கொண்டிருந்தது... 
வீட்டுக்கு அழைத்துவந்து 
மகனே நீ அருமையாக படிக்கிறாய் 
வெரி குட் என்றேன் 
அவன் கண்களில் தோன்றிய 
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை

Comments

Popular posts from this blog

குழந்தைகள் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு

பேரிடர் மேலாண்மை