அன்னை தெரசா

​ஈன்றத் தாயளவு இணையாக இவ்வுலகில் 
ஈரமுள்ள நெஞ்சாய் வாழ்ந்திட்ட உயிரவர் 
ஈடில்லா இதயமாம் அன்னை தெரசாவை 
ஈடிதம் புரிந்திடுக உலகோரே என்றென்றும் ! 

ஈவிரக்கத்தின் உருவம் செய்திட்ட பணியை 
ஈடேற்ற இயலாது எவராலும் இவ்வுலகில் 
ஈமம் அடையும்வரை மறவாதீர் என்றுமே 
ஈகை குணமுடன் வாழ்ந்திடுக வையத்தில் ! 

( ஈடிதம் = தொழுதல் ) 
​( ஈமம் = சுடுகாடு ) ​ 

Comments

Popular posts from this blog

குழந்தைகள் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு

பேரிடர் மேலாண்மை