மின்னாட்சி
இந்தியாவில் மின்னாட்சி சேவை அளிக்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
மத்திய மாநில அரசுத்துறை நிறுவனங்கள் அளிக்கும் மின்-ஆளுமையின் கூறுகள் தற்போது ‘பயன்பாட்டுநிலையை’ எட்டியிருக்கின்றன. பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இத்தகைய சேவைகளைப் பெறுகின்றனர். பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே அரசு வழங்கும் அனைத்து சேவைகளையும் அளிப்பதை 2006 இல் தொடங்கப்பட்ட தேசிய மின்-ஆளுமைத் திட்டம் (என்இஜிபி NeGP) நோக்கமாகக் கொண்டுள்ளது. இச்சேவைகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பொது சேவை மையங்கள் (சிஎஸ்சி – CSC) மூலம் அளிக்கப்படுகின்றன. 2012 பிப்ரவரி மாதம் வரை 97,159 (CSC செய்தி மடல் - 2012) பொது சேவை மையங்கள் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு மக்களுக்கு சேவை அளித்துவருகின்றன. பல்வேறு நிறுவனஙகளின் முயற்சியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் பரவலாக்கப்பட்டு வருவதன் பயன்களை கிராமப்புற மக்கள் பெற்றுவரும் இவ்வேளையில் (InDG) ‘ஐஎன்டிஜி’யின் முயற்சியில் உருவான பொது சேவை மையங்கள் வட்டார மொழியில் மக்களுக்கு வேண்டிய தகவல்களையும் சேவைகளையும் அளிக்கின்றன. இத்தகைய முயற்சி ஊரக மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment